முல்லைத்தீவு – சிலாவத்துறை பகுதியில் தீ விபத்தில் சிக்கி முதியவர் ஒருவர் உயிரிழந்தார் என்று முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் முல்லைத்தீவு – சிலாவத்துறை பகுதியைச் சேர்ந்த 75 வயதுடையவர் ஆவார்.
தனது மகனின் வீட்டுக்கு அருகிலுள்ள மற்றுமொரு வீட்டில் தனியாக வசித்து வந்த முதியவரே இவ்வாறு உயிரிழந்தார். கடும் மழையால் ஏற்பட்ட குளிரை சமாளிக்க வெப்பமூட்டுவதற்காக வீட்டுக்குள் தீ பற்றவைத்தார்.
இதன்போது தீ பரவியதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம்
வெளியிட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு
பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.