சீரற்ற காலநிலை காரணமாக தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ள உயர்தரப் பரீட்சையை மீள நடத்துவது குறித்து நாளை 29ஆம் திகதிக்கு பின்னர் தீர்மானிக்கப்படும் என பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா தெரிவித்துள்ளார்.
நேற்று பிற்பகல் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
எதிர்வரும் 29ஆம் திகதிக்கு பின்னர் வானிலை நிலைமைகளை மீள்பகுப்பாய்வு செய்து தேவையான நிபந்தனைகளை அமைத்து அதன் பின்னர் மீண்டும் உயர்தர பரீட்சையை ஆரம்பிக்க நட வடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார்.
எவ்வாறாயினும், மோசமான வானிலை காரணமாக க.பொ.த உயர் தரப் பரீட்சையை 3 நாட்களுக்கு தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு நேற்றுமுன்தினம்
தீர்மானிக்கப்பட்டது.
நேற்று, இன்று மற்றும் நாளை ஆகிய மூன்று நாள் உயர்தரப் பரீட்சை நடைபெறாது என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.