தொடர் மழையால் கிளிநொச்சி மாவட்டம் கனகாம்பிகைக்குளம் வான்பாயத் தொடங்கியிருப்பதால் மக்களை அவதானமாக இருக்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புப் பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.
இன்று அதிகாலை (26) 1 மணிளவில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை,
முல்லைத்தீவு மாவட்டத்தின் முத்தையன் கட்டுக் குளத்திற்கான நீர்வரத்தும் அதிகரித்துள்ளமையால் அதன் வான் கதவுகளும் திறக்க நேரிடும் என்பதால் நீரேந்து பகுதிகளில் உள்ள மக்களை அவதமான இருக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புப் பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.