நினைவுகூரலுக்குத் தடையில்லை – பொதுப் பாதுகாப்பு அமைச்சு!

Editor 1

வடக்கு மக்கள் போரில் இறந்த தமது உறவினர்களை நினைவு கூரலாம். ஆனால் புலிகள். சின்னத்தையோ சீருடைகளையோ அல்லது படங்களையோ பயன்படுத்தி மாவீரர் நாளை அனுட்டிக்க முடியாது என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். கல்கமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில்
கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் ஆனந்த விஜேபால இதனை கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-

இறந்தவர்களை நினை கூரும் உரிமை உறவினர்களுக்கு சட்டப்படி உள்ளது.

ஆனால் வடக்கில் மாவீரர்களை கொண்டாட இடமில்லை. புலிகள் அமைப்பின் சின்னம் அல்லது சீருடைகள் அல்லது அதன் படங்களைப் பயன்படுத்த முடியாது.

நாட்டில் சட்டம் உள்ளது, சட்டப்படி புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்ட அமைப்பு.

ஆனால் அது வடக்கோ, கிழக்கோ, தெற்கோ அல்லது மலையகமோ, எதுவாக இருந்தாலும், உங்கள் குழந்தைகளில் ஒருவர் இறந்தால், அந்தக் குழந்தையை நினைவு கூர உங்களுக்கு உரிமை உண்டு. அதன் மூலம் தடை செய்யப்பட்ட அமைப்புகளை நினைவு கூர்ந்து மீண்டும் தமது மேலாதிக்கத்தை நிலைநாட்டுவார்கள் என்பதை சமூகம் நம்பவேண்டியதில்லை.

இறந்த உறவினர்களை நினைவு கூரும் யாரையும் நாங்கள் தடுக்கவில்லை. அதனால்தான் வடபகுதி மக்கள் சில சமயங்களில் உறவினர்களை நினைவு கூர்வதற்கு வேறு அர்த்தம் கொடுக்கப்படுகிறது என்று நினைக்கிறேன்.

ஆனால் புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்ட அமைப்பாகும், அவர்கள் தங்கள் சின்னங்கள், சீருடைகள், பனர்களைப் பயன்படுத்தி கொண்டாடுவதற்கு இடமில்லை. ஆனால், இந்த நாட்டிலுள்ள எந்தவொரு நபரின் இறந்த உறவினரையும் நினைவு கூருவதை நாங்கள் ஒரு போதும் தடுக்க மாட்டோம்-என்றார்.

Share This Article