மன்னார் – யாழ்ப்பாணம் பிரதான வீதியிலுள்ள பெரியமடு இராணுவ பயிற்சி முகாமில் 500 இற்கும் மேற்பட்ட சிப்பாய்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அவர்களில் சிலருக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக அவர்கள் மன்னார் பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனையில், அவர்கள் மூளைக் காய்ச்சலால்
பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதனை, மன்னார் மாவட்ட பொதுமருத்துவமனையின் மருத்துவ அத்தியட்சகர் மருத்துவர் அஸாத் எம் ஹனீபாஉறுதிபடுத்தினார்.
இந்த நிலையில் குறித்த பயிற்சி முகாமில் பயிற்சி நடவடிக்கைகளை நிறுத்த
மருத்துவர்கள் குழு பரிந்துரைத்துள்ளது.
இதையடுத்து, அங்கு பயிற்சி பெற்ற 500 இராணுவத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.