வெளியாகிவரும் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளில் ஜேவிபி தலைமையிலான கூட்டணி கூடுதல் வாக்குகளைப் பெற்றுவருகிறது.
இதுவரை வெளியாகிய முடிவுகளின் அடிப்படையில்,
தேசிய மக்கள் முன்னணி – 451, 479
ஐக்கிய மக்கள் சக்தி – 73,004
புதிய ஜனநாயக முன்னணி – 29,020
பொதுஜன பெரமுன – 23,095 என்ற அடிப்படையில் வாக்குகளைப் பெற்றுள்ளன.
திருகோணமலை மாவட்டத்தில் தபால் மூல வாக்குகளின் விபரங்களில் அடிப்படையில் தமிழரசுக்கட்சி 4 ஆவது இடத்தினைப் பெற்றுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலின் திருகோணமலை மாவட்டத்தின் அஞ்சல் மூல தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
திருகோணமலை மாவட்ட உத்தியோகப்பூர்வ அஞ்சல் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.
தேசிய மக்கள் சக்தி – 9,705 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சக்தி – 2,853 வாக்குகள்
இலங்கை தமிழரசுக் கட்சி – 1,749 வாக்குகள்
புதிய ஜனநாயக முன்னணி – 382 வாக்குகள்
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன – 140 வாக்குகள்