2024 பொதுத் தேர்தலில் அண்ணளவாக 60 முதல் 65 சதவீத வாக்குகள் பதிவானதாகத் தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பாரிய அளவிலான எந்தவித முறைகேடும் இதுவரை பதிவாகவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, சில மாவட்டங்களில் அஞ்சல் மூல வாக்குகளை எண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
வாக்குப் பதிவுகள் இன்று காலை 7 மணிமுதல் மாலை 4 மணிவரை இடம்பெற்றன.
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் 60 சதவீத வாக்குகளும், நுவரெலியா மாவட்டத்தில் 68 சதவீத வாக்குகளும், வன்னி தேர்தல் மாவட்டத்தில் 65 சதவீத வாக்குகளும், மொனராகலை மாவட்டத்தில் 63 சதவீத வாக்குகளும், மாத்தறை மாவட்டத்தில் 64 சதவீத வாக்குகளும், மாத்தளை மாவட்டத்தில் 67 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.
பதுளை மாவட்டத்தில் 67 சதவீத வாக்குகளும், கேகாலை மாவட்டத்தில் 64 சதவீத வாக்குகளும்,
கொழும்பு மாவட்டத்தில் 65 சதவீதமும், இரத்தினபுரி மாவட்டத்தில் 63 சதவீதமும், குருநாகல் மாவட்டத்தில் 64 சதவீதமும், புத்தளம் மாவட்டத்தில் 56 சதவீதமும், பொலன்னறுவை மாவட்டத்தில் 65 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.
கண்டி மாவட்டத்தில் 62 சதவீத வாக்குகளும், களுத்துறை மாவட்டத்தில் 64 சதவீத வாக்குகளும், கம்பஹா மாவட்டத்தில் 65 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளும் பதிவாகியுள்ளன.
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 60 சதவீத வாக்குகளும், திகாமடுல்லை தேர்தல் மாவட்டத்தில் 62 சதவீத வாக்குகளும், காலி மாவட்டத்தில் 64 சதவீத வாக்குகளும், அனுராதபுரம் மாவட்டத்தில் 65 சதவீத வாக்குகளும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 61 சதவீத வாக்குகளும், திருகோணமலை மாவட்டத்தில் 67 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.