தமிழரசுக்கட்சியின் பரப்புரைக் கூட்டத்தில் குழப்பம்; சுமந்திரன் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார்!

தமிழரசுக்கட்சியின் பரப்புரைக் கூட்டத்தில் குழப்பம்; சுமந்திரன் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார்!

Editor 1

பரப்புரை கூட்டத்தில் சிலர் சுமந்திரனிடம் கேள்விகளை எழுப்ப முற்பட்டதால் அங்கு குழப்பம் ஏற்பட்டது.

நேற்றைய தினம் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பரப்புரை கூட்டம் சுழிபுரத்தில் நடைபெற்றது.

பரப்புரை கூட்டத்தில் சுமந்திரன் உரையாற்றிய பின்னர், அங்கிருந்த சிலர் கேள்விகளை எழுப்ப முயன்றனர். இன்போது குழப்பம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கு முறுகல் நிலை ஏற்பட்டது.

அந்த சமயத்தில் அங்கு நின்ற பொலிஸார் சமரச முயற்சியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, கேள்விகளை எழுப்ப முயன்றவர்களை அவ்விடத்திலிருந்து வெளியேற்றினர்.

இதேசமயம் சுமந்திரனின் ஆதரவாளர்கள் அவரை பாதுகாப்பாக அழைத்துச் சென்று வாகனத்திலேற்றி அனுப்பி வைத்தனர்.

Share This Article