யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் குழந்தை ஒன்று தூக்கி வீசப்பட்டமை மற்றும் தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பிலான குற்றச்சாட்டை அடுத்து சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிவரும் பொலிஸார் நால்வர் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீதியில் பயணித்த வாகனம் ஒன்று விபத்துக்குள்ளான நிலையில், விபத்தில் சிக்கியவர்களை பொலிஸார் கண்மூடித்தனமாக தாக்கியதாகவும் குழந்தை ஒன்றை பறித்து பற்றையில் வீசியதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.
இந்நிலையிலேயே குறித்த சம்பவத்துடன் தொடர்புட்டவர்கள் என்று சந்தேகிக்கப்படும் நால்வர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத் தரப்புக்கள் தெரிவிக்கின்றன.