எதிர்வரும் 5ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் பல பகுதிகளில் கனமானது முதல் மிகக்கனமானது வரையான மழை வீழ்ச்சி
கிடைக்கும் என்று யாழ். பல்கலைக்கழக புவியியல் துறை தலைவர் கலாநிதி நா. பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்த மாதத்தில் 3 தாழமுக்க நிகழ்வுகள் தோன்ற வாய்ப்புள்ளது
என்றும் அவர் கூறியுள்ளார்.
எதிர்வரும் 6 அல்லது 7ஆம் திகதி இலங்கைக்கு கிழக்காக வங்காள விரிகுடாவில் இலங்கை முழுவதையும் தன் வெளி வளையத்துக்குள் உள்ளடக்கியதாக காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது.
இதனால் எதிர்வரும் 5ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகள் உட்பட நாட்டின் பல பகுதிகளுக்கும் கனமானது முதல் மிகக் கனமானது வரை மழை கிடைக்
கும் வாய்ப்புள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.