கடன் மறுசீரமைப்பு அத்தியாயம் விரைவில் முழுமைபெறும் என்கிறார் திறைசேரியின் செயலாளர்!

கடன் மறுசீரமைப்பு அத்தியாயம் விரைவில் முழுமைபெறும் என்கிறார் திறைசேரியின் செயலாளர்!

editor 2

கடன் மறுசீரமைப்புக்கான அத்தியாயம் விரைவில் முழுமைபெறும் என்று இலங்கை நம்பிக்கை கொண்டுள்ளது. சீனாவுடன் உயர்தர, முன்னுரிமை திட்டங்களுக்கு புதிய நிதியுதவி உட்பட வலுவான நிதி உறவை மீண்டும் தொடங்க முடியும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது என்று திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்த்தன தெரிவித்தார்.

கொழும்பில் புதன்கிழமை (30) இரவு நடைபெற்ற சீன உதவிப்பயிற்சி மற்றும் பழைய மாணவர் வரவேற்பு நிகழ்வில் பங்கேற்று உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், இலங்கைக்கான சீனாவின் ஆதரவு, நாட்டின் அபிவிருத்திக்கு குறிப்பாக உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதார உதவித் துறையில் முக்கியப் பங்காற்றியுள்ளது என்பதை நாம் மறந்துவிட முடியாது.

பல ஆண்டுகளாக, துறைமுகங்கள் உட்பட பல்வேறு திட்டங்களில் சீனா பில்லியன் டொலர்களை முதலீடு செய்துள்ளது. இந்த முதலீடுகள் இலங்கையின் தளவாடத் திறன்களை மேம்படுத்துதல் மற்றும் பிராந்திய வர்த்தக மையமாக அதன் நிலையை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

குறிப்பாக நெருக்கடியான காலங்களில் இலங்கையின் பொருளாதார சவால்களை எதிர்கொள்ள சீனா நிதி உதவி மற்றும் கடன்களை வழங்கியுள்ளது. ஒட்டு மொத்தமாக, சீனாவின் தற்போதைய ஆதரவு பொருளாதார வளர்ச்சி மற்றும் நவீனமயமாக்கலுக்கான இலங்கையின் அபிலாஷைகளில் முக்கிய பங்கு வகிக்கிறது.

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் நிலைத்தன்மை பகுப்பாய்வுடன் இணக்கத்தன்மையை உறுதிசெய்தல், பிறகடன் வழங்குநர்களுடன் ஒப்பிடும் தன்மையை உறுதிசெய்தல் ஆகிய விடயங்களும் கடன் மறுசீரமைப்பு செயல்முறையும் எவ்வளவு சிக்கலானது

மற்றும் தொழில்நுட்ப ரீதியாக சவாலானது என்பதை நாம் அனைவரும் அறிவோம். சீன கடன் வழங்குநர்களுடனான பரஸ்பர நம்பிக்கை மற்றும் இரு தரப்பினரும் வெளிப்படுத்திய நல்ல நம்பிக்கையின் அடிப்படையில் குறித்த சிக்கல்களைக் கடப்பதற்கு சாத்தியமான நிலைமை ஏற்பட்டது.

கடன் மறுசீரமைப்புக்கான அத்தியாயம் விரைவில் முழுமைபெறும் என்று இலங்கை நம்பிக்கை கொண்டுள்ளது. மேலும் சீனாவுடன் உயர்தர முன்னுரிமை திட்டங்களுக்குபுதிய நிதியுதவி உட்பட வலுவான நிதி உறவை மீண்டும் தொடங்க முடியும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

அத்துடன், கடனை நிலைத்தன்மை, பொருளாதாரச் செழுமையை நோக்கிய இலங்கையின் பயணத்தில் முக்கியமான படியாக இருக்கும் இலங்கையின் கடன் மறுசீரமைப்புச் செயல்முறையை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு தேவையான உதவிகளை வழங்கிய ஏனைய உத்தியோகபூர்வ மற்றும் தனியார் கடன் வழங்குநர்களுக்கும் நான் நன்றிகளைத் தெரிவிக்கின்றேன்.

கற்கைகளையும், பயிற்சிகளையும் நிறைவு செய்து நாடு திரும்பிய ஏராளமான அதிகாரிகள், இங்கு கூடியிருக்கிறார்கள். நீங்கள் பெற்ற அறிவு மற்றும் திறன்கள் மூலம் உங்கள் பங்களிப்புகள் இறுதியில் நம் நாட்டை மேம்படுத்த உதவும் என்பதால், அவ்வாறு செய்யுமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

Share This Article