அனுரவுடன் இணைந்து பணியாற்றக்கூடிய தகுதி தமிழரசுக்கட்சிக்கே உள்ளது என்கிறார் சாணக்கியன்!

அனுரவுடன் இணைந்து பணியாற்றக்கூடிய தகுதி தமிழரசுக்கட்சிக்கே உள்ளது என்கிறார் சாணக்கியன்!

editor 2

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுடன் இணைந்து பணியாற்றக் கூடிய தகுதி வாய்ந்த கட்சி இலங்கைத் தமிழரசுக் கட்சி மாத்திரமே என அந்த கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

களவு எடுத்தவர்களைச் சேர்த்துக் கொள்ள மாட்டேன். 

கொள்ளையடித்தவர்களைச் சேர்த்துக் கொள்ள மாட்டேன். 

ஊழல்வாதிகளைச் சேர்த்துக் கொள்ள மாட்டேன். 

கட்சி தாவுகின்றவர்களையும் சேர்த்துக் கொள்ள மாட்டேன் என ஜனாதிபதி கூறியிருக்கிறார். 

இப்படியான ஒரு சூழலில் ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்றக் கூடிய தகுதி வாய்ந்த கட்சி இலங்கைத் தமிழரசுக் கட்சி மாத்திரமே எனச் சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.


Share This Article