தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் புதிய கடன்களை பெற்றுள்ளது என தெரிவிக்கப்படுவதை அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் மறுத்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
எந்த நாட்டிடமிருந்தும் நிறுவனத்திடமிருந்தும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் புதிதாக கடன்கொள்வனவில் ஈடுபடவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
புதிதாக பணத்தை அச்சிடவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பணத்தை புதிதாக அச்சிடுவதென்றால் ஜனாதிபதியின் கையெழுத்து ஒவ்வொன்றிலும் காணப்படவேண்டும்,எனினும் இதுவரை ஜனாதிபதியின் கையெழுத்துடன் எந்த நாணயமும் வெளியாகவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.