அறுகம்குடா தாக்குதல் முயற்சி; மூளையாக செயற்பட்டவர் போதைப்பொருள் வியாபாரியாம்!

அறுகம்குடா தாக்குதல் முயற்சி; மூளையாக செயற்பட்டவர் போதைப்பொருள் வியாபாரியாம்!

editor 2

அம்பாறை மாவட்டத்தில் பொத்துவிலில் அமைந்துள்ள அறுகம்குடா தாக்குதல் திட்டத்தின் மூளையாக செயற்பட்டவர் ஒரு போதைப்பொருள் வியாபாரி என்று சிங்கள வார ஏடு ஒன்று பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக நேற்று சனிக்கிழமை வெளியான அந்த வார ஏட்டின் பிரதான தலைப்பு செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அறுகம்குடா பகுதியில் இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்ட சம்பவத்தின் மூளையாக செயற்பட்டவர் கொழும்பைச் சேர்ந்த போதைப்பொருள் வியாபாரி என பயங்கரவாத புலனாய்வு அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

மேலும் ஒருவர் கைது செய்யப்பட்ட தமிழ் நபருக்கும் மாலைதீவு குடிமகனுக்கும் தொலைபேசியில் அழைப்பு விடுத்துள்ளதுடன், பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் போதைப்பொருள் கடத்தல் காரனிடம் ஏதாவது உதவிகளை பெற்றுக்கொள்ள முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்தேக நபர்கள் கடத்தல் காரரை சந்தித்தார்களா என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை. அது மட்டுமின்றி, தொடர்புடைய கடத்தல்காரரும் அப்பகுதியில் இருந்து தப்பிச்சென்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த திட்டமிட்ட தாக்குதலின்படி, இஸ்ரேலியர்கள் அதிகம் நடமாடும் இடத்துக்கு சென்று கத்தியால் குத்துவது போன்ற காயங்களை ஏற்படுத்துவதே திட்டமாக இருந்தது. இந்தத் திட்டத்தின் பின்னணியில் உள்ள அனைவரும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் மற்றும் உளவுத்துறை வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

லெபனான் மற்றும் பலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் தாக்குதல் மற்றும் காசா பகுதியை அழித்தது மற்றும் ஹிஸ்புல்லா தலைவரின் படுகொலை ஆகியவை இந்த தாக்குதலைத் திட்டமிடுவதற்கான முக்கிய காரணம். எனினும், எமது நாட்டுக்கு வருகை தரும் இஸ்ரேலியர்களுக்கு தெரியாமல் இருக்க உளவுத்துறையினர் அவர்களை பின்தொடர்ந்து செல்ல முடிவு செய்துள்ளனர்.

இரண்டு வாரங்களாக இந்த பாதுகாப்பு நடவடி;கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளபடி, இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் எமது நாட்டுக்கு வருகை வந்த இஸ்ரேலிய குடிமக்களின் எண்ணிக்கை 20,515 ஆகும். மேலும், 43,678 அமெரிக்கர்கள் உள்ளனர். 134,464 பிரித்தானியர்களும் உள்ளனர்.

அறுகம்குடா கடற்கரையில் அலைச்சறுக்கல் செய்வதற்கு இந்த காலகட்டம்
சரியான நேரம் என்று கூறப்படுகிறது.

எனவே ஏராளமான இஸ்ரேலியர்கள் வருகை தருவார்கள். அந்த நேரத்தில், அவர்கள் அந்தப் பகுதியில் அவர்கள் உருவாக்கிய ஹீப்ரு மத இடங்களில் மத
விழாக்கள் மற்றும் அணிவகுப்புகளிலும் பங்கேற்பார்கள். எனவே, அவர்கள்
அவ்வாறு பயணிப்பதனை தடுத்து நிறுத்துமாறு கூறப்பட்டுள்ளது.

இது தவிர மாத்தறை, வெலிகம, காலி, ஹிக்கடுவ, நீர்கொழும்பு, எல்ல போன்ற பிரதேசங்களிலும் பொலிஸ் சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article