வடக்கு மார்க்கத்திலான ரயில் சேவை, நாளை முதல் வழமைக்குத் திரும்பவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, கொழும்பு கோட்டைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான யாழ்தேவி ரயில் சேவை, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகும்
என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது அத்துடன், அனுராதபுரத்துக்கும்
பெலியத்தவுக்கும் இடையிலான ராஜரட்டை ரெஜின ரயில் சேவையும் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு ரயில் மார்க்கத்தில் முன்னெடுக்கப்படும் திருத்தப் பணிகள் காரணமாக கொழும்பு-கோட்டையிலிருந்து மஹவ வரை மாத்திரமே தற்போது ரயில் சேவை முன்னெடுக்கப்படுகிறது.