கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் இருப்பைக் கருத்தில் கொண்டு, தமிழ்த் தேசியம் பேசும் கட்சிகளுக்கே தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் இவ்வாறு கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் தெரிவித்துள்ளனர்.
நேற்று முன்தினம் நடத்திய ஊடக சந்திப்பிலேயே கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தனர்.
அண்மையில், யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய ஊடக சந்திப்பிலும் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கே தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.