அறுகம்குடாவில் இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் இடம்பெறலாம் என்பது குறித்து இந்திய புலனாய்வுபிரிவுகள் இலங்கை பாதுகாப்பு படையினரை எச்சரித்துள்ளன.
இந்திய புலனாய்வு பிரிவினர் இதனை தெரிவித்துள்ளனர் என்று தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை இலங்கையர்கள் இருவரை இந்த தாக்குதலை மேற்கொள்ள தயாராகயிருந்தனர் என்றும் இவர்களில் ஒருவர் ஈராக்கை சேர்ந்தவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவர்களிற்கு ஐந்து மில்லியன் வழங்கப்பட்டிருந்ததாக இந்திய புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளன.