எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்காக வன்னி தேர்தல் மாவட்டத்தில் ஜனநாயக தேசிய கூட்டணி தாக்கல் செய்த வேட்புமனுவை நிராகரிப்பதற்கு, மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி மேற்கொண்ட தீர்மானத்தை வலுவற்றதாக்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி ஜனநாயக தேசிய கூட்டணியின் வன்னி மாவட்ட வேட்புமனுக்கள் தெரிவத்தாட்சி அதிகாரியால் ஏற்கப்பட வேண்டுமென உயர்நீதிமன்றம் இன்று (23) உத்தரவிட்டுள்ளது.