திருமலை – மட்டு தொடருந்து சேவை பகலில் மட்டும் இடம்பெறும்!

திருமலை - மட்டு தொடருந்து சேவை பகலில் மட்டும் இடம்பெறும்!

editor 2

திருகோணமலை – மட்டக்களப்பு தொடருந்து மார்க்கத்தில் பகல் வேளைகளில் மாத்திரம் தொடருந்து சேவைகள் இடம்பெறும் எனத் தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு – மட்டக்களப்பு தொடருந்து மார்க்கத்தில் மின்னேரியா – ரொட்டவௌ பகுதியில் கடந்த 18 ஆம் திகதி அதிகாலை எரிபொருள் கொண்டு சென்ற தொடருந்தில் மோதி 2 யானைகள் உயிரிழந்தன.

இதன்போது, தொடருந்து மார்க்கத்தில் பாரிய சேதம் ஏற்பட்டிருந்தது.

இதன் காரணமாக மட்டக்களப்பு – கொழும்பு மார்க்கத்தில் சகல தொடருந்து சேவைகளும் இரத்துச் செய்யப்பட்டிருந்தன.

இந்த விபத்தைத் தொடர்ந்து குறித்த மார்க்கம் பாதுகாப்பற்றது எனவும், அதனூடாக பயணிப்பது பொருத்தமற்றது எனவும் பல்வேறு தரப்பினரும் குற்றஞ்சாட்டி வந்தனர்.

இந்தநிலையில், குறித்த மார்க்கத்தினூடாக பகல் வேளைகளில் மாத்திரமே தொடருந்து பயணிக்கும் எனத் தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

Share This Article