மத்திய-கிழக்கு வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதியில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மற்றும் கடற்படையினர் இது தொடர்பில் எச்சரிக்கையாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்காரணமாக அந்த கடற்பகுதிகளில் காற்றின் வேகமானது மணிக்கு 80 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும்.
இன்று (20) காலை 07.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு அடுத்த 24 மணித்தியாலங்களுக்குச் செல்லுபடியாகும் எனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, வட மாகாணத்தில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.