சட்ட நடவடிக்கையை எதிர்கொள்கிறார் அரியநேத்திரன்!

சட்ட நடவடிக்கையை எதிர்கொள்கிறார் அரியநேத்திரன்!

editor 2

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான தங்களது வருமானம் மற்றும் செலவு அறிக்கையினை சமர்ப்பிக்காத மூன்று வேட்பாளர்கள் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பான சட்ட நடவடிக்கையினை காவல்துறையினர் மேற்கொள்வார்கள் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் பிரசார செலவு தொடர்பான அறிக்கைகளை கையளிப்பதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழு வழங்கியிருந்த கால அவகாசம் கடந்த 13ஆம் திகதியுடன் நிறைவடைந்தது.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட 38 வேட்பாளர்களில் 35 வேட்பாளர்கள் உரிய அறிக்கைகளை வழங்கியிருந்தனர்.

இருப்பினும் பத்தரமுல்ல சீலரத்ன தேரர், சுயேச்சை வேட்பாளர் சரத் கீர்த்திரத்ன மற்றும் தமிழ் பொது வேட்பாளர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் ஆகியோர் வருமானம் மற்றும் செலவு அறிக்கையைச் சமர்ப்பிக்கவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது

Share This Article