திருமணமாகி ஆறு மாதங்கள்; மின்சாரம் தாக்கி அனலைதீவு ஐயனார் ஆலயத்தில் குடும்பஸ்தர் மரணம்!

திருமணமாகி ஆறு மாதங்கள்; மின்சாரம் தாக்கி அனலைதீவு ஐயனார் ஆலயத்தில் குடும்பஸ்தர் மரணம்!

editor 2

அனலை தீவு ஐயனார் ஆலயத்தின் ஒலிபெருக்கியில் பாடலை ஒலி
பரப்ப மின்னிணைப்பை ஏற்படுத்த முயன்றவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

இச்சம்பவம் அனலைதீவு ஐயனார் ஆலயத்தில் நேற்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றது.

இதில், அனலைதீவு 5ஆம் வட்டாரத்தை சேர்ந்த நடராசா துஷ்யந்தன் (வயது 37) என்பவரே உயிரிழந்தார்.

அவர் திருணமாகி ஆறு மாதங்கள் என்று தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, ஆலயத்தில் பாடலை ஒலிபரப்புவதற்காக மின்னிணைப்பு பணியில் அவர் ஈடுபட்டிருந்
தார். அந்தச் சமயம் மின்சாரத்தால் தாக்குண்ட அவரை மருத்துவமனைக்கு
கொண்டுசென்றபோது, ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.

உயிரிழந்தவரின் சடலம் உடல்கூற்று பரிசோதனைக்காக யாழ். போதனா மருத்
துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. விசாரணைகளை ஊர்காவற்றுறை
பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

புனரமைப்பு வேலைகளுக்காக பாலஸ்தாபனம் செய்யப்பட்டுள்ள அனலை தீவு ஐயனார் ஆலயத்தின் நிர்வாகத்தினர் இடையே ஏற்பட்டுள்ள முறுகல் நிலை காரணமாக கடந்த நான்கு வருடங்களாக ஆலய புனரமைப்பு வேலைகள் நிறைவு பெறாமல்் இழுபறி நிலையில் இருந்து வருகிறது.

பிரசித்தி பெற்ற இவ்வாலயத்தின் நிலைமை குறித்து நிர்வாகத்தினர் மீது பொதுமக்கள் விமர்சனங்களை தெரிவித்துவரும் நிலையிலேயே இச்சம்பவமும் இடம்பெற்றுள்ளது

Share This Article