வியாழேந்திரனுடன் உடன்படிக்கை எதுவும் இல்லை – கோவிந்தம் கருணாகரன்!

வியாழேந்திரனுடன் உடன்படிக்கை எதுவும் இல்லை - கோவிந்தம் கருணாகரன்!

editor 2

தங்களுக்கும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனுக்கும் எவ்வித உடன்படிக்கையும் இல்லை என ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளர் கோவிந்தம் கருணாகரன் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தாக்கல் செய்த வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது.

இந்த பின்னணியில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவளிக்கவுள்ளதாக முற்போக்கு தமிழர் கழகத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எஸ்.வியாழேந்திரன் நேற்று தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் மட்டக்களப்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளர் கோவிந்தம் கருணாகரன் தங்களது தரப்பு வியாழேந்திரனுடன் எவ்வித உடன்படிக்கையையும் செய்து கொள்ளவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

Share This Article