இலங்கை – இந்தியா இடையில் புகையிரதப் பாதை?

இலங்கை - இந்தியா இடையில் புகையிரதப் பாதை?

editor 2

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான ஐந்து பில்லியன் டொலர் வீதி புகையிரதபாதை இணைப்பு திட்டம் குறித்து மீண்டும் ஆராயப்படுவதாக சுற்றாடல் அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி இந்தியாவின் மின்டிற்கு தெரிவித்துள்ளார்.

இதற்கான செலவை இந்தியாவே பொறுப்பேற்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக இந்தியா முயற்சிகளை மேற்கொண்டுள்ள நிலையில் இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அனுரகுமார திசநாயக்க பொறுப்பேற்றுள்ள நிலையில் அறிவிக்கப்பட்டுள்ள முதலாவது பெரும் இரு தரப்பு திட்டம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த மாதம் நான் இந்தியாவில் கூட்டமொன்றில் கலந்துகொண்டேன்,நாங்கள் தமிழ்நாட்டின் இராமேஸ்வரத்திற்கும் இலங்கையின் திருகோணமலைக்கும் இடையில் நெடுஞ்சாலையொன்றையும்,புகையிரதபாதையொன்றையும் அமைக்கவுள்ளோம் என பிரபாத்சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.

இருநாடுகளினதும் வர்த்தகர்கள் அதிகளவு கட்டணத்தை செலுத்தவேண்டியுள்ளதாலேயே இது குறித்து திட்டமிடப்படுவதாக தெரிவித்துள்ள அவர் புகையிரத தரைப்பாதையை அமைத்தால் இரு தரப்பினருக்கும் அது உதவியாக அமையக்கூடும்,ஐரோப்பா உட்பட ஏனைய நாடுகளுடன் வர்த்தகத்திற்கு அது உதவும், இந்திய வர்த்தகர்கள் இலங்கையிலிருந்து நன்மையை பெறமுடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share This Article