நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் வேட்பாளர்கள் நியமனம் தொடர்பில் நேற்றும் இன்றும் நடைபெற்ற இழுபறியின் தொடராக யாழ்.மாவட்டத்தில் தமிழரசுக்கட்சி சார்பில் போட்டியிடவுள்ளவர்கள் எனக் குறிப்பிட்டு ஒன்பது பேர் கொண்ட பெயர்ப் பட்டியலை தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தர் சுமந்திரன் வவுனியாவில் வெளியிட்டார்.
இன்று மாலை நடைபெற்ற குறித்த ஊடக சந்திப்பில் பொதுச் செயலாளர் சத்தியலிங்கமும் பங்குகொண்டிருந்தார்.
அவர் வெளியிட்ட பெயர் அடிப்படையில்,
சிவஞானம் சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன், எஸ்.ஈ.சீ.இளங்கோவன், கேசவன் சயந்தன், சந்திரலிங்கம் சுகிர்தன், சுரேக்கா சசீந்திரன், தியாகராஜா பிரகாஸ், இமானுவேல் ஆர்னோல்ட், கிருஸ்ண வேணி சிறிதரன் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.
அவர்களில் சிவஞானம் சிறீதரன் தவிர்ந்த அனைவரும் சுமந்திரன் ஆதரவாளர்கள் என்றும் நியமனம் தொடர்பில் இழுபறி நிலை நீடித்ததாகவும் அங்கிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழரசுக்கட்சியின் புதிய நிர்வாகத் தெரிவின் பின்னர் சுமந்திரன் – சிறிதரன் தரப்புக்கள் சமூகவலைத்தளங்களிலும் நேரிலும் மோதல் போக்கினை கடைப்பிடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.