மதுபான பாவனையால் நாட்டில் தினமும் 50 பேர் இறக்கின்றனர். வருடாந்தம் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பேர் வரை உயிரிழக்கின்றனர் என்று மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன், மதுபான பாவனையால் அரசாங்கத்துக்கு வருடாந்தம் 2 ஆயிரத்து 370 கோடி ரூபாய் சுகாதார மற்றும் பொருளாதார செலவினங்கள் ஏற்படுகின்றன என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
2022ஆம் ஆண்டு மதுசாரம் மூலமாக ஆயிரத்து 650 கோடி ரூபாய் வருமானம் கிடைத்தது. ஆனால், அதே ஆண்டில் மதுசாரத்தால் ஏற்பட்ட பொருளாதார மற்றும் சுகாதார சீர்கேடுகளுக்காக 2 ஆயி ரத்து 370 கோடி ரூபாய் செலவிடப்பட்டது – என்று மதுசார ஒழிப்பு தினமான நேற்றைய தினம் அந்த அமைப்பு விடுத்துள்ள
அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.