யாழ்ப்பாணம், மானிப்பாய் – சங்குவேலியில் ஒரு கோடியே 7 இலட்சம் ரூபாயை வழிப்பறி செய்த இருவரையும் இதற்கு மூளையாக பின்னணியில் செயல்பட்ட நபரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நேற்று முன்தினம் புதன்கிழமை இடம்பெற்ற இந்த வழிப்பறி சம்பவம் தொடர்பில் மேலும் அறிய வருவதாவது,
ஜேர்மனியில் இருந்து வந்த நபர் ஒருவர் சேந்தாங்குளம் பகுதியிலிருந்த தனது காணியை விற்றுவிட்டு இணுவிலிலுள்ள வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
சங்குவேலியில் அவர் வந்துகொண் டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில்
வந்த இருவர் அவரின் பணப்பையை பறித்துச் சென்றனர்.
பணத்தைப் பறிகொடுத்தவர் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார். இதையடுத்து, விரைந்து செயல்பட்ட பொலிஸார் ஏனைய பொலிஸ் நிலையங்களுக்கும் தகவல் அளித்தனர். தொடர்ந்த விசாரணைகளில் கொடிகாமம், ஊரெழுவை சேர்ந்த 20, 22 வயது இளைஞர்கள் இருவரை கோப்பாய் பொலிஸார் கைது செய்தனர்.
சந்தேகநபர்களிடமிருந்து ஒரு கோடியே 5 இலட்சம் ரூபாய், 2 இலட்சம் ரூபாய் பெறுமதியான யூரோ மற்றும் பெறுமதியான கைபேசி, கடவுச்சீட்டு என்பவற்றை மீட்டனர்.
இந்த வழிப்பறி சம்பவத்துக்கு மூளையாக காணியை விற்றுக் கொடுத்த தர
கரே செயல்பட்டார் என்றும் அவரை கைது செய்து விசாரித்தபோதே ஏனைய
இருவரையும் கைது செய்ததாகவும் கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன், கைதான மூன்று சந்தேக நபர்களையும் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.