ஜனாதிபதியால் எரிபொருட்களின் விலைகளை குறைக்க முடியவில்லை – டலஸ் குற்றச்சாட்டு!

ஜனாதிபதியால் எரிபொருட்களின் விலைகளை குறைக்க முடியவில்லை - டலஸ் குற்றச்சாட்டு!

editor 2

மக்கள் எதிர்ப்பார்த்ததைப் போல, எரிபொருட்களின் விலைகளை புதிய ஜனாதிபதியினால் குறைக்க முடியவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” ஜனாதிபதித் தேர்தலில் முன்னிலைக்கு வந்த தேசிய மக்கள் சக்தியும், ஐக்கிய மக்கள் கூட்டணியும் மிகவும் சிறியக் கட்சிகளாகும்.

இந்த இரண்டு கட்சிகளும் 04 வருடங்களாகத்தான் அரசியலில் ஈடுபடுகின்றன. இந்த சிறியக் கட்சிகள், 60 வருடத்திற்கும் பழைமையான கட்சிகளை ஜனாதிபதித் தேர்தலில் தோற்கடித்துள்ளன.

இந்த அரசியல் பாடத்தை அனைவரும் புரிந்துக் கொள்ள வேண்டும்.
நாம் புதிய அரசாங்கத்தின் ஊழல் ஒழிப்பு செயற்பாட்டுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க தயார்.

இன்று எரிபொருட்களின் விலைகள் குறைவடைந்துள்ளன. ஆனால், மக்கள் எதிர்ப்பார்த்த அளவில் எரிபொருள் விலை குறையவில்லை.

இது தொடர்பாக கடந்த காலங்களில் ஒரு லீற்றருக்கு 120 ரூபாய் அளவில், யாருடையதோ பக்கெட்டுக்கு செல்வதாக புதிய ஜனாதிபதி கூறியிருந்தார்.

ஆனால்,

அவர் கூறியதைப் போன்று விலைக்குறைப்பு இடம்பெறவில்லை. எனவே, இதுதொடர்பாக அவர் சிந்திக்க வேண்டும்” இவ்வாறு டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

Share This Article