7 இலட்சத்து 50,000 கடவுச்சீட்டுகளைத் தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு செய்வதைத் தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவை மாற்றுவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு இன்று மீள அழைக்கப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த இடைக்கால உத்தரவின் காரணமாகக் கடவுச்சீட்டு வழங்குவது தொடர்பில் சிக்கல் எழுந்துள்ளமையினால் குறித்த இடைக்கால உத்தரவை மாற்றுமாறு சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான மேலதிக மன்றாடியார் நாயகம் சுமதி தர்மவர்தன கோரினார்.
இதன்படி, மக்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியத்தைக் கருத்திற் கொண்டு மனுதாரர் தரப்பான எபிக் லங்கா நிறுவனம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள், குறித்த இடைக்கால உத்தரவை மாற்றுவதற்கு நீதிமன்றில் இணக்கம் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும், ஐந்து மில்லியன் இலத்திரனியல் கடவுச்சீட்டுகளைக் கொள்வனவு செய்வதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தைத் தடுக்கும் இடைக்காலத் தடை உத்தரவை அடுத்த தவணை வரை நீடிப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தநிலையில் குறித்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணை எதிர்வரும் நவம்பர் மாதம் 6ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.