பழமை வாய்ந்த கட்சிகளை மக்கள் நிராகரித்துள்ளனர் – குமார் குணரட்ணம்!

பழமை வாய்ந்த கட்சிகளை மக்கள் நிராகரித்துள்ளனர் - குமார் குணரட்ணம்!

Editor 1

பழமையான பாரம்பரிய அரசியல் கட்சிகளை மக்கள் நிராகரித்தமை தேர்தல் முடிவுகளின் ஊடாக புலப்படுவதாக முன்னிலை சோசலிச கட்சியின் செயலாளர் குமார் குணரட்ணம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-

இதுவரை காலமும் ஆட்சியமைத்த பாரம்பரிய பழமை வாய்ந்த கட்சிகளை மக்கள் நிராகரித்துள்ளனர். 76 வருடங்களில் பாரம்பரிய அரசியல் கட்சிகளே ஆட்சியமைத்துள்ளன.

இந்த விடயத்தை நாம் சிறந்த மாற்றமாகக் கருதுகின்றோம். நாடு வங்குரோத்து அடைந்தமையினால் ஏற்பட்ட மக்கள் எழுச்சியின் பிரதிபலனாகவே இந்த விடயம் அமைந்துள்ளது.

மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் விடயத்தில் தேசிய மக்கள் சக்தியினருக்கு பாரிய சவால்கள் உள்ளன.

அநுரகுமார திசாநாயக்க அவருடைய தேர்தல் பிரசார நடவடிக்கையின்போது ஊழல் மோசடிகளை இல்லாதொழிப்பதாக கூறியிருந்தார். அந்த வகையில் ஊழல் மேசாடிகளில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டியது
அவசியமாகும் – என்றார்.

Share This Article