ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான புதிய அமைச்சரவை இன்றைய தினம் பதவியேற்றுள்ளது.
இதன்படி, பாதுகாப்பு உள்ளிட்ட பல முக்கிய அமைச்சு பொறுப்புகள் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.
பாதுகாப்பு அமைச்சுக்கு மேலதிகமாக, நிதி, பொருளாதார அபிவிருத்தி, கொள்கை வகுத்தல், திட்டமிடல் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு, வலுசக்தி, விவசாயம், காணி, கால்நடை, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீர்வளங்கள் ஆகிய அமைச்சுகள் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் கீழ் கொண்டுவரப் பட்டுள்ளன.
அதேநேரம், நீதி, பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி, தொழில் அமைச்சு, கல்வி, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம், மகளிர், சிறுவர் மற்றும் இளைஞர் விவகாரம், விளையாட்டுதுறை ஆகிய அமைச்சு பொறுப்புகள் பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு வழங்கப்பட்டுள்ளன.
அத்துடன், வர்த்தக, வாணிபம், உணவு பாதுகாப்பு, கூட்டுறவு அபிவிருத்தி, கைத்தொழில் மற்றும் முயற்சியாண்மை அபிவிருத்தி மற்றும் சுகாதாரம் ஆகிய அமைச்சுகளும் பிரதமர் ஹரினி அமரசூரியவுக்கு வழங்கப்பட்டுள்ளன.