இன்றிரவு நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் டிசம்பரில் தேர்தல்கள் இடம்பெறலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரதமர் தினேஸ் குணவர்த்தன பதவியை இராஜினாமா செய்துள்ளதை தொடர்ந்து ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க இன்று நான்கு அமைச்சர்கள் கொண்ட இடைக்கால அமைச்சரவையை நியமிப்பார்கள் இவர்கள் 15 அமைச்சு பதவிகளை பகிர்ந்துகொள்வார்கள் என தேசிய மக்கள் சக்தி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க பாதுகாப்பு, நிதியமைச்சு, நீதி, கைத்தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு ஆகிய அமைச்சுகளை தன்வசம் வைத்திருப்பார்.
பிரதமராக பதவியேற்பவர் வெளிவிவகாரம் கல்வி ஊடகத்துறை ஆகியவற்றின் பொறுப்புகளை தன்வசம் வைத்திருப்பார்.
ஹரிணி அமரசூரிய பிரதமராக பதவியேற்பார், விஜித ஹேரத் லக்ஸ்மன் நிபுண ஆராச்சி ஆகியோரும் அமைச்சரவை பதவிகளை வகிப்பார்கள்.
நாடாளுமன்ற தேர்தல் இரண்டு மாதங்களின் பின்னர் இடம்பெறும் அதாவது டிசம்பரில் என தெரிவித்துள்ள தேசிய மக்கள் சக்தி வட்டாரங்கள், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதும், வேட்பு மனுக்களிற்கான திகதியை ஜனாதிபதி அறிவிப்பார் எனவும் தெரிவித்துள்ளன.