2024ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள அனுரகுமார திஸாநாயக்கவுக்கு இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் (JulieChung) வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,
“இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற அனுரகுமார திசாநாயக்கவிற்கு அமெரிக்கா தனது வாழ்த்துகளைத் தெரிவிக்கின்றது.
இலங்கை மக்கள் தமது ஜனநாயக உரிமைகளை அமைதியான முறையில் பயன்படுத்தியமைக்கு நாமும் வாழ்த்துகிறோம்.” என பதிவிட்டுள்ளார்.