யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் கல்குலேட்டர் சின்னத்துக்கு 06 ஆயிரத்து 74 வாக்குகள் கிடைக்கப் பெற்றன. சுயேச்சை 4இல் போட்டியிட்ட கே. கே. பியதாஸ என்பவருக்கே இந்த வாக்குகள் கிடைத்துள்ளன.
கல்குலேட்டர் சின்னத்துக்கு இந்தளவு வாக்குகள் அதிகம் கிடைத்தமைக்கு தொலைபேசி சின்னத்தை கைபேசி சின்னமாகக் கருதியதும் கைபேசி சின்னத்துக்கும் கல்குலேட்டர் சின்னத்துக்கும் 1 இடையே காணப்பட்ட நெருங்கிய
ஒற்றுமையே இந்தளவு பெருந்தொகையான வாக்குகள் கிடைக்கக் காரணம்
என்று கூறப்படுகின்றது.
கல்குலேட்டர் சின்னத்துக்கு வன்னி தேர்தல் மாவட்டத்தில் 3 ஆயிரத்து 240 வாக்குகளும் மட்டக்களப்பில் 3 ஆயிரத்து 57 வாக்குகளும் திகாமடுல்ல (அம்பாறை) மாவட்டத்தில் ஆயிரத்து 452 வாக்குகளும் திருகோணமலையில் ஆயிரத்து 746 வாக்குகளும் கிடைத்துள்ளன.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கல்குலேட்டர் சின்னத்துக்கு 15 ஆயிரத்து 569 வாக்குகள் கிடைத்த அதேசமயம் நாடு முழுவதும் 47 ஆயிரத்து 543 வாக்குகள் கிடைத்தன என்பதும் சுட்டிக் காட்டத்தக்கது.