ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று பிற்பகல் 4 மணியுடன் நிறைவடைந்துள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.
13, 421 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்புக்கள் நடைபெற்றிருந்தன. 1 கோடியே 71 இலட்சத்து 40 ஆயிரம் பேர் வாக்களிக்கத்தகுதி பெற்றிருந்தனர்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தகவலின் படி நள்ளிரவுக்குள் தபால் மூல வாக்களிப்பின் முதலாவது முடிவு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விருப்பு வாக்கு எண்ணும் பணி நடைபெற்றாலும் கூட, நாளை (22) தேர்தல் முடிவுகள் அறிவிக்கும் பணி முடிவடைந்துவிடும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அஞ்சல் மூல வாக்குகள் எண்ணும் பணி இன்று மாலை 4.30 மணி தொடக்கம் 5.00 மணிக்குள் தொடங்கும் என்று தேர்தல்கள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.