வாக்காளர் ஒருவர் வாக்களிப்பதற்கு முன் தனது அடையாளத்தை உறுதிப்படுத்த தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு, சாரதி அனுமதிப் பத்திரம், அரச சேவை ஓய்வூதியர் அடையாள அட்டை ஆகியவற்றை பயன்படுத்தமுடியும்.
இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க விளக்கமளித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-
வாக்களிப்பதற்காக தேசிய அடையாள அட்டையின் பழைய மற்றும் புதிய அடையாள அட்டைகள் இரண்டும் வாக்களிக்க செல்லுபடியாகும். மேலும், செல்லுபடியாகும் கடவுச் சீட்டு, செல்லுபடியாகும் சாரதி அனுமதிப் பத்திரம், அரச சேவை ஓய்வூதியர் அடையாள அட்டை, பழைய அல்லது ஈ-அடையாள அட்டை
ஆகிய இரண்டும் செல்லுபடியாகும்.
மேலும், தெளிவற்ற அடையாள அட்டைகள், புதிய தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் போது வழங்கப்படும் பற்றுச்சீட்டு போன்ற புகைப்படத்துடன் கூடிய அல்லது இல்லாத வேறு எந்த ஆவணமும் வாக்குச்சாவடியில் ஏற்றுக்கொள்ளப்படாது. – என்றார்.