வட்டக்கச்சியில் விபத்து; இளைஞர் பலி!

வட்டக்கச்சியில் விபத்து; இளைஞர் பலி!

editor 2

கிளிநொச்சி, இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட வட்டக்கச்சி சில்வா வீதியில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 21 வயதான இளைஞன் உயிரிழந்துள்ளார்.

இளைஞன் பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப் பாட்டை இழந்து மரத்துடன் மோதியதினாலேயே எந்த விபத்து சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் உயிரிழந்தவர் வட்டக்கச்சி மாயவனூர் பகுதியைச் சேர்ந்த 21 வயதான கண்ணதாசன் கபிலன் எனவும், குறித்த நபர் ஒரு பிள்ளையின் தந்தை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share This Article