2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் வாகனங்களுக்கான இறக்குமதித் தடை முற்றாக நீக்கப்படவுள்ளது.
இதற்கான தீர்மானத்தை அமைச்சரவை மேற்கொண்டிருப்பதாக அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு ஒதுக்கத்தின் கணிசமான அதிகரிப்பு மற்றும் ரூபாயின் பெறுமதி அதிகரிப்பு போன்ற காரணங்களின் அடிப்படையில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.