மக்களின் வருகையின்மையால் யாழ்ப்பாணம் உடுப்பிட்டியில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெறவிருந்த சஜித்தின் பரப்புரைக் கூட்டம் இரத்துச் செய்யப்பட்டது.
ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரித்து உடுப்பிட்டி தொகுதியில் கரணவாய் கொலின்ஸ் மைதானத்தில் நடைபெற ஏற்பாடாகியிருந்தது.
நேற்று முற்பகல் 10 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெறவிருந்த நிலையில்
இசைக்குழுவினர் மட்டும் நிகழ்ச்சியை நடத்தியிருந்தனர். ஓரிருவர் தவிர வேறெவரும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
இதையடுத்து அந்தக்கூட்டம் இரத்து செய்யப்பட்டது. இலங்கை தமிழ் அரசுக் கட்சி சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவை அறிவித்த பின்னரும்கூட சஜித்தின் பிரசாரக் கூட்டத்தில் மக்கள் பங்கேற்கவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
இதேவேளை, நேற்றைய தினம் தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரித்து நடந்த கூட்டத்தில் பெருமளவிலானோர் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.