இலங்கையில் பல இடங்களில் சீன மொழி ஊக்குவிக்கப்படுகிறது. இதற்காக பயிற்றப்பட்ட சீன ஆசிரியர்கள் இலங்கையில் தங்கியுள்ளனர் என்று சீனாவின் சின்ஹூவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, சப்ரகமுவ, ஊவா மாகாணங்களில் சீன மொழி பல இடங்களில் கற்பிக்கப்படுகின்றது.
சப்ரகமுவ பல்கலைக்கழகத்திலும் ஊவா மாகாணத்தின் சில பாடசாலைகளிலும் பிரத்தியேக வகுப்புகளும் நடைபெறுகின்றன.
சீன மொழியைக் கற்பிப்பதற்காக சீனாவிலிருந்து பயிற்றுவிக்கப்பட்ட ஆசிரியர்கள் இலங்கையில் தங்கி இருந்து பணியாற்றுகின்றனர்
என்று சின்ஹூவா தெரிவித்துள்ளது.