நெடுந்தீவை அண்மித்த இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 14 பேரை இன்று மாலை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இலங்கை கடற்படையினர் முன்னெடுத்த சோதனையின் போது, அவர்கள் நெடுந்தீவை அண்மித்த கடற்பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்திலேயே கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.
இதன்போது அவர்கள் பயணித்த 3 படகுகளும் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கைது செய்யப்பட்ட மீனவர்களை யாழ்ப்பாணம் கடற்றொழில் திணைக்களத்திற்கு அழைத்து சென்ற இலங்கை கடற்படையினர், அவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.