மாதகல் கடலில் படகு கவிழ்ந்ததில் காணாமல்போன இளைஞரின் சடலம் நேற்று காலை மீட்கப்பட்டது.
மாதகல் கடலில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை அதிகாலை மீன்பிடிப்பதற்காக இரு இளம் மீனவர்கள் படகில் சென்றிருந்தனர்.
அப்போது, படகு கவிழ்ந்ததில் இருவரும் கடலில் மூழ்கினர். ஒருவர் நீந்திக்கொண்டிருந்த நிலையில் சக மீனவர்களால் காப்பாற்றப்பட்டார்.
மற்றையவர் காணாமல் போயிருந்தார். நேற்று மாலைவரை மீனவர்களும் கடற்படையினரும் காணாமல்போன மீனவரை தேடிய போதும் அவரை மீட்கமுடியவில்லை.
இந்த நிலையில், நேற்று வியாழக்கிழமை காலை அவரின் சடலம் கரையொதுங்கியது.
மாதகலை சேர்ந்த 21 வயதான நாகராஜா பகீரதன் என்ற இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் இளவாலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.