நாட்டில் சுவாசம் தொடர்பான நோய்கள் தற்போது அதிகரித்து வருகின்றன என்று சுகாதார அமைச்சின் செயலாளர் மருத்துவர் பாலித மஹிபால தெரிவித்தார்.
சுவாச ஆரோக்கியம் தொடர்பான தேசிய சுகாதார மற்றும் பராமரிப்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் நடந்த கலந்துரையாடலிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அத்துடன், நகரமயமாக்கல், வளி மாசுபாடு, காலநிலை மாற்றம் போன்ற காரணிகளால் சுவாச ஆரோக்கியம் பெரிதும் பாதிக்கப்படுகின்றது.
இதனால் நாட்டில் சுவாச நோய்களின் ஆபத்தைக் குறைக்கும் நோக்கில் பல்
வேறு திட்டங்களை ஆரம்பிப்பதற்குத் தீர்மானித்துள்ளதாகவும் மேலும் குறிப்பிட்டார்.