இலங்கையின் மனித உரிமை நிலவரங்கள் விவகாரம் – மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை!

இலங்கையின் மனித உரிமை நிலவரங்கள் விவகாரம் - மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை!

editor 2

இலங்கையின் மனித உரிமை நிலவரங்கள் மற்றும் தனிமனித சுதந்திரத்துக்கு ஏற்பட்டுள்ள புதிய அச்சுறுத்தல்களை மையப்படுத்தி, அடுத்த மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் புதிய தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளது.

இலங்கை தொடர்பாக எதிர்வரும் செப்டம்பர் மனித உரிமைகள் மாநாட்டில், மனித உரிமைகள் ஆணையாளரால் முன்வைக்கப்படவுள்ள அறிக்கையின் முதல் பிரதி அண்மையில் வெளியானது.

இலங்கை அரசாங்கம் தமது மனித உரிமை நிலைமைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து சர்வதேசத்துக்குப் பெரிதாக எடுத்துச் சொல்லி வருகிறது.

ஆனால் இலங்கையில் மனித உரிமைகள் மற்றும் சுதந்திரத்துக்கான புதிய அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது என்பதை மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

குறிப்பாக இலங்கையின் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு, பொதுமக்களின் சுதந்திரங்களைக் கட்டுப்படுத்துவதற்கு புதிய சட்ட ஒழுங்குகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

அத்துடன் மேலும் பல மனித உரிமைகள் மற்றும் சுதந்திரத்துக்கு எதிரான அச்சுறுத்தல்கள் மேலோங்கி இருக்கின்றன.

இந்த விடயங்களைக் கருத்திற் கொண்டு, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள், காத்திரமான புதிய பிரேரணை ஒன்றை இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக மனித உரிமைகள் மாநாட்டில் முன்வைக்க வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

Share This Article