வடக்கு, கிழக்கில் நடந்த படுகொலைகளுக்கு நீதி – தேர்தல் அறிக்கையில் அநுரகுமார!

வடக்கு, கிழக்கில் நடந்த படுகொலைகளுக்கு நீதி - தேர்தல் அறிக்கையில் அநுரகுமார!

editor 2

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கடந்த காலத்தில் இடம்பெற்ற படுகொலைகள், காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் மற்றும் ஆட்கடத்தல் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்தி நீதியை நிலை நாட்டுவோம்’ – இவ்வாறு அநுரகுமார திஸநாயக்கவின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்தியா உட்பட பிராந்திய நாடுகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்த இலங்கையை தளமாகப் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் – என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் செப்ரெம்பர் 21 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்தத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் அநுரகுமார திஸநாயக்க போட்டியிடுகிறார்.

அவர் தனது தேர்தல விஞ்ஞாபனத்தை ‘வளமான நாடு அழகான வாழ்க்கை’ எனும் தொனிப் பொருளில் நேற்று திங்கட்கிழமை கொழும்பில் வெளியிட்டார். அதில் தெரிவிக்கப்பட்ட முக்கிய அம்சங்கள் வருமாறு,

இனவாதம் மற்றும் மதத் தீவிரவாதத்தால் இடம்பெற்றுள்ள வன்முறை
சம்பவங்களை புலன்விசாரணை செய்வதற்கான உண்மை மற்றும் மீளிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் செயல்பாடு விரிவாக்கப்படும்.

மதங்களிடையேயான மோதல்களை தவிர்க்க மதத் தலைவர்கள், கல்விமான்கள் இணைந்த சர்வமதப் பேரவை நிறுவப்படும். தேசிய மற்றும் மத ஐக்கியத்துக்கான கலாசார நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளை தேசிய, மாகாண மற்றும் மாவட்ட மட்டத்தில் ஏற்படுத்தப்படும்.

அரசியல் கைதிகளை விடுதலை செய்வதுடன், அவர்கள் சுதந்திரமாக
சமூகமயமாதலை உறுதிப்படுத்துவோம்.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் உள்ளிட்ட அடக்குமுறைசார் அனைத்து சட்டங்களையும் ஒழித்து அனைத்து மக்களினதும் சுதந்திரம் உறுதி செய்யப்படும்.

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் சகல பிரதேசங்களிலும் மக்களின் சிவில்
உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையிலான சிவில் நிர்வாகம் முறைமைப்
படுத்தப்படும்.

போரில் விதவைகளானோர், அநாதைகள் மனஅழுத்தங்களுக்கு
உள்ளானவர்களுக்கு மானிய உதவிகள் வழங்கப்படும். இனக் கட்டமைப்பை
மாற்றியமைக்கும் குறிக்கோளுடன் மேற்கொள்ளப்படும் மக்கள் குடியேற்றங்களை நிறுத்துதல். காணிகள் மற்றும் வாழ்விடங்கள் பற்றிய தேசிய ஆணைக்குழு ஒன்றின் ஊடாக நிலவும் பிரச்னை களுக்கு தீர்வு காணப்படும்.

அரசமைப்பின் 16ஆவது திருத்தத்தின் கீழ் ஏற்றுக்கொள்ளப்பட்ட தேசிய
மொழிக் கொள்கையை அவசியமான வளங்கள் மற்றும் தொழில்நுட்ப
வசதிகளைப் பெற்றுக் கொடுத்து நடைமுறைப்படுத்தப்படும்.

Share This Article