ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் உள்ளூராட்சி தேர்தல் இடம்பெறும் என முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய எதிர்வு கூறியுள்ளார்.
உள்ளூராட்சி தேர்தல்கள் குறித்து உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு மக்களுக்கு கிடைத்த வெற்றி என அவர் குறிப்பிட்டார்.
தேர்தலை தாமதப்படுத்தியது தவறான நடவடிக்கை என தெரிவித்துள்ள அவர், நீதிமன்றம் இதனை உறுதி செய்துள்ளமை நீதியை நோக்கிய முக்கியமான நடவடிக்கை எனவும் கூறினார்.
நீதிமன்றத்தின் இந்த தீர்மானம் ஆச்சரியமளிக்கும் ஒன்றல்ல என தெரிவித்த
அவர், தேர்தல்களைப் பிற்போடுவதுஒத்திவைப்பது மக்களின் உரிமைகளை
மீறும் செயல் என நீதிமன்றம் தொடர்ச்சியாக தெரிவித்து வந்துள்ளது என
சுட்டிக்காட்டினார்.
தாமதமானாலும் இறுதியாக நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது என நான் கருதுகின்றேன். ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்ததும் தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளூராட்சி தேர்தல்களை நடத்தும் என நான் எதிர்பார்க்கின்றேன் என
மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.