மாகாண சபைகள் தேர்தல் சட்ட மூலம் இன்று சபையில் சமர்ப்பிப்பு!

மாகாண சபைகள் தேர்தல் சட்ட மூலம் இன்று சபையில் சமர்ப்பிப்பு!

editor 2

இறுதி செய்யப்பட்ட மாகாண சபைகள் தேர்தல் சட்ட மூலம் இன்று
புதன்கிழமை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இன்றைய தினம்
இந்த சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டாலும் எதிர்வரும் செப். 3ஆம் திகதியே விவாதம் நடைபெற்று சட்டமாக அங்கீகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனிடையே,

மாகாண சபைகள் தேர்தல் சட்டமூலத்தின் நகலை நேற்று செவ்வாய்க்கிழமை
பாராளுமன்ற சட்டவாக்கல் நிலையியல் குழு இறுதி செய்ததுடன், ஒருமனதாக அங்கீகாரமும் வழங்கியது.

முன்னதாக நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் மாகாண சபைகளுக்கான
தேர்தலை தொகுதி, விகிதாசார முறைமையில் மாற்றுவதற்கு பாராளுமன்றில்
தீர்மானம் இயற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து எல்லை நிர்ணய பிரச்னையால் சட்டமூலம் நிறைவேற்றப்படவில்லை.

இதனால், மாகாண சபைகளுக்கான தேர்தல் கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்த முடியவில்லை.

இந்த நிலையில், மாகாண சபைகளுக்கான தேர்தலை பழைய முறையில்
அதாவது விகிதாசார முறைமையில் நடத்துவதற்கு சுமந்திரன் எம். பி.
தனிநபர் பிரேரணையை சமர்ப்பித்திருந்தார். இது வர்த்தமானியிலும்
வெளியிடப்பட்டது.

சுமந்திரனின் இந்தப் பிரேரணை தொடர்பில் ஆராய்ந்த உயர்நீதிமன்றம்
சில பரிந்துரைகளை வழங்கியது. அந்த மாற்றங்கள் செய்யப்பட்ட நகல் வடிவத்தையே நேற்றைய தினம் பாராளுமன்ற நிலையியல் குழுவால் ஒருமனதாக அங்கீகரிக்கப்பட்டது. நிலையியல் குழுவின் நேற்றைய கூட்டம் பதில் சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தலைமையில் நடந்தது. இதில், கோவிந்தன் கருணாகரம், மனோ கணேசன், சுமந்திரன், சுரேன் ராகவன் உள்ளிட்ட 6 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share This Article