அரசாங்கத்தைப் பொறுப்பேற்குமாறு ராஜபக்ஷக்கள் அழைப்பு விடுக்கவில்லை – அநுர குமார!

அரசாங்கத்தைப் பொறுப்பேற்குமாறு ராஜபக்ஷக்கள் அழைப்பு விடுக்கவில்லை - அநுர குமார!

editor 2

அரசாங்கத்தைப் பொறுப்பேற்குமாறு ராஜபக்ஷக்கள் எங்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை. ஆனால், நெருக்கடிக்குத் தீர்வு காண நாம் தயார். அதிகாரத்தைத் தாருங்கள் என்று ஜனாதிபதி கோட்டாபயவுக்கு கடிதம் அனுப்பினோம். அந்த கடிதம் கிடைத்தது என்றுகூட எங்களுக்கு பதில் வரவில்லை – இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பதிலளித்துள்ளார் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸநாயக்க.

நேற்று ஜே. வி. பியின் தலைமை பணிமனையில் நடந்த செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அநுர குமார திஸநாயக்க கூறிய முக்கிய விடயங்கள் வருமாறு, தேசிய மக்கள் சக்திக்கு கோட்டாபயவோ – மகிந்த ராஜபக்ஷவோ அரசாங்கத்தை பொறுப்பேற்குமாறு அழைப்பு விடுக்கமாட்டார்கள் – எங்களுக்கு அழைப்பு விடுக்கவுமில்லை.

அதற்காக நாங்கள் ஆச்சரியப்படப் போவதுமில்லை. நீங்கள் நினைக்கிறீர்களா ராஜபக்ஷக்கள் ஒரு தாம்பாளத்தில் வைத்து எங்களுக்கு இதை ஒப்படைப்பார்கள் என்று. அப்படி ஒப்படைக்க மாட்டார்கள்.

மே 12 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபயவுக்கு ஒரு கடிதத்தை எழுதினோம். இந்த நெருக்கடியை தீர்த்து வைக்க தேசிய மக்கள் சக்தி தயார். எங்களுக்கு அதிகாரத்தைத் தாருங்கள் என்று அதில் கூறியிருந்தோம்.

குறைந்தபட்சம் அந்தக் கடிதம் கிடைத்தது என்றுகூட எங்களுக்கு பதில்
கிடைக்கவில்லை.

அடுத்ததாக பாராளுமன்றத்தில் நான் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் ஜனாதிபதி பதவிக்காகப் போட்டியிட்டேன்.

எங்களுக்கு வாக்களித்திருக்கலாமே. அன்று பாராளுமன்றத்தில் நாங்கள்
மூன்று பேர் மாத்திரமே இருந்தோம். எங்களுக்கு சார்பாக பாராளுமன்றத்தில்
எவருமே வாக்களிக்கவில்லை. அதற்கான காரணம் என்ன? அவர்கள் ஒருபோதுமே எங்களுக்கு அப்படி அதிகாரத்தை கொடுக்கமாட்டார்கள். ஏன்? அவர்களுக்கு தெரியும் தேசிய மக்கள் சக்திக்கு அதிகாரத்தை பெற்றுக் கொடுப்பதென்பது ஊழலுக்கும் மோசடிக்குமான முற்றுப்புள்ளியென.

அவர்களுக்கு தண்டனை வழங்குவதை நாங்கள் பிரதான
காரணமாக கொண்டிருக்கிறோமென்று.

எனவே ரணில் விக்கிரமசிங்கவும் அவருடைய கையாட் களும் தொடர்ச்சியாக
நாங்கள் தப்பி யோடினோமென கூறிவருகிறார்கள். ஆனால், நாங்கள் அப்படி
தப்பியோடி யவர்களல்ல – என்றார்.

முன்னதாக அநுராபுரத்தில் கடந்த சனிக்கிழமை நடந்த பிரசாரக் கூட்டத்தில்
பேசிய ஜனாதிபதி ரணில் ‘ஆட்சியை பொறுப்பேற்குமாறு கோட்டாபய ராஜ
பக்ஷ கோரியபோது அநுரவும் சஜித்தும் தப்பியோடி ஒளிந்தனர்’, என்று கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share This Article