இலங்கையர்கள் உட்பட 22 பேருடன் பயணித்த படகு சூறாவளியில் சிக்கி மூழ்கியது!

இலங்கையர்கள் உட்பட 22 பேருடன் பயணித்த படகு சூறாவளியில் சிக்கி மூழ்கியது!

editor 2

இலங்கையர்கள் உட்பட 22 பேருடன் பயணித்த 160 அடி நீளமான
சொகுசு படகு சிசிலி தீவு அருகே கடலில் மூழ்கியது. இதில், ஏழு பேரைக் காணவில்லை என்று இத்தாலி ஊடகங்கள் தெரிவித்தன.

நேற்று திங்கட்கிழமை அதிகாலை 5 மணியளவில் வீசிய சூறாவளியில் அகப்பட்டே படகு கடலில் மூழ்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.

சிசிலியில் பலேர்மோ அருகே சூறா வளி தாக்கியதிலேயே படகு மூழ்கியதாகத் தெரிய வந்தது.

இந்தப் படகில் இலங்கையர்கள் தவிர, நியூசிலாந்து, அயர்லாந்து
நாட்டவர்களும் பிரிட்டன், பிரான்ஸ் நாடுகளை சேர்ந்த இருவரும் பயணித்திருந்தனர். இவர்கள் விடுமுறையை கழிப்பதற்காக சிசிலி
தீவுக்கு பயணித்திருந்தனர் என்று தெரியவருகின்றது.

படகு மூழ்கியதை அடுத்து, கடலோர காவல்படை மற்றும் தீயணைப்பு வீரர்
கள் ஒரு வயது குழந்தை உட்பட 15 பேரை மீட்டனர்.

மீட்கப்பட்ட குழந்தையும் தாயும் பலேர்மோவின் குழந்தைகள் மருத்து
வமனை யில் சேர்க்கபட்டனர். இருவரும் நலமுடன் இருக்கின்றனர் எனவும்
தாய்க்கு சிறு காயங் கள் மட்டுமே ஏற்பட்டன எனவும் தெரிவிக்கப்பட்டது.

Share This Article