நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினம் 100 மில்லிமீற்றர் வரையான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இலங்கைக்கு அருகே வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக நிலவும் மழையுடனான வானிலை அதிகரிக்கக்கூடும்.
மேல், வடமேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றர் வரையான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடிய சாத்தியம் நிலவுகிறது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.